அயோத்தி கோவில் கருவறை பிரதிஷ்டைக்கான ஸ்ரீராமர் சிலை தேர்வு!
Mar 15, 2026, 05:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி கோவில் கருவறை பிரதிஷ்டைக்கான ஸ்ரீராமர் சிலை தேர்வு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 2, 2024, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்காக, கேதார்நாத்திலுள்ள ஆதி சங்கராச்சாரியாரின் சிலையை வடிவமைத்த, மைசூரு சிற்பக் கலைஞர் அருண் யோகிராஜ் வடிவமைத்த பலராமர் சிலை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில், ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், பிரம்மாண்டமான ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில், கோவிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்காக வடிவமைக்கப்பட்டு வந்த 3 சிலைகளில், கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்த 5 வயதுடைய குழந்தை இராமர் சிலையை, அறக்கட்டளை நிர்வாகிகள் ஓட்டெடுப்பு வாயிலாக தேர்வு செய்திருக்கின்றனர்.

இச்சிலை, ஸ்ரீராமரின் குழந்தைப் பருவம், குறும்புத்தனம், கம்பீரத்தை சித்தரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இச்சிலையை வடிவமைத்த அருண் யோகிராஜ் குடும்பம், 200 ஆண்டுகளாக சிற்பங்கள் செதுக்குவதில் சிறந்து விளங்குகிறது. இவரது தந்தை, தாத்தா, கொள்ளு தாத்தா என 5 தலைமுறையாக சிற்பத் தொழில் செய்து வருகின்றனர்.

எம்.பி.ஏ. முதுகலை படிப்பு முடித்த அருண் யோகிராஜ், தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஆனால், சிற்பக் கலையின் மீதிருந்த ஆர்வத்தால், பணியை துறந்து பரம்பரை தொழிலில் ஈடுபட்டார். இவர், 2008-ம் ஆண்டு முதல் சிற்பங்களை வடிவமைத்து வருகிறார். இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட வெவ்வேறு சிலைகளை வடிவமைத்திருக்கிறார்.

குறிப்பாக, கேதார்நாத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியார் சிலை, புதுடெல்லியின் இந்தியா கேட் பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் சுபாஷ் சந்திர போஸ் சிலை ஆகியவை இவர் வடிவமைத்துதான். இச்சிலைகளை திறந்து வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அருண் யோகிராஜை நேரில் அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அருண் யோகிராஜ் கூறுகையில், “ராம் லல்லா சிலை வடிவமைக்க வாய்ப்புக் கிடைத்தது எனது அதிர்ஷ்டம்” என்றார். அதேபோல, அவரது தாயார் சரஸ்வதி கூறுகையில், “நிறைய புராண புத்தகங்களை ஆய்வு செய்து இச்சிலையை வடிவமைத்திருக்கிறார். சிலை மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் அவரது தந்தை இல்லையே என்பது வருத்தமாக உள்ளது” என்றார்.

அருண் யோகிராஜ் மனைவி விஜேதா கூறுகையில், “என் கணவர் கடந்த 6 மாதங்களாக வீட்டுக்கு வரவில்லை. அயோத்தியிலேயே பாலராமர் சிலை வடிவமைப்பதில் ஆர்வத்துடன் செயல்பட்டார். 6 மாத கைக் குழந்தை இருந்தும், அதைக்கூட பார்க்க வரவில்லை. எனது கணவர் வடிவமைத்த சிலை நிச்சயம் தேர்வு செய்யப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது” என்றார்.

அருண் யோகிராஜ் அண்ணன் சூரிய பிரகாஷ் கூறுகையில், “எனது தம்பி, மைசூரு மாவட்டம் ஹெச்.டி.கோட்டில் கிடைக்கும் கிருஷ்ண கல்லில் பாலராமர் சிலையை வடிவமைத்திருக்கிறார். பொதுவாக, 850 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் இரும்பும் கரைந்து விடும். ஆனால், இந்த வகை சிலை மீது ஆசிட் வீசினாலும் ஒன்றும் ஆகாது, வெடிக்காது. மழை, காற்று, வெயில் எதுவானாலும் ஒன்றும் ஆகாது.

மைசூரு அரண்மனையில் உள்ள சிலைகளும், கிருஷ்ண கல்லால் வடிவமைக்கப்பட்டவைதான். ஹெச்.டி.கோட் ஹாசனில் மட்டுமே இந்த வகை கற்கள் கிடைக்கும். மிகவும் கெட்டியாக இருப்பதால், சிலை செதுக்குவது கடினமான பணியாகும். அனைத்து பருவ காலத்திலும் ஒரே மாதிரியான அனுபவத்தை தரும் என்பதால், வெளிநாடுகளில் வீட்டின் மேற்கூரைக்கு இந்த கல்லை பயன்படுத்துகின்றனர். இந்த கற்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து ராம் மந்திர் அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் சௌபால் கூறுகையில், “3 சிலைகளும் தயாராக இருக்கின்றன. இந்த 3 சிலைகளுமே ஸ்ரீராமர் கோவிலுக்குள் நிறுவப்படும். ஆகவே, சிலைகளுக்கு இடையே போட்டி இல்லை. 3 சிலைகளும் அவசியம். இவை 3-ம் வெவ்வேறு இடங்களில் நிறுவப்படும். இதைக் கருத்தில் கொண்டே 3 சிலைகள் செய்யப்பட்டன” என்றார்.

கர்நாடகாவைச் சேர்ந்த டாக்டர் கணேஷ் பட், அருண் யோகிராஜ், ஜெய்ப்பூரைச் சேர்ந்த சத்ய நாராயண் பாண்டே ஆகிய 3 பேரும் 3 வெவ்வேறு இடங்களில், 3 வகையான கற்களை பயன்படுத்தி சிலைகளை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞரான கர்நாடகாவின் கர்காலா நகரைச் சேர்ந்த வாசுதேயோ காமத் ஓவியத்தின் அடிப்படையில் இந்த இராம் லல்லா சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

சிலை தயாரானதைத் தொடர்ந்து, 1985-ம் ஆண்டு முதல் ஆடைகளை உருவாக்கி வரும் தையல்காரர் குடும்பத்தை அறக்கட்டளை நிர்வாகிகள் வரவழைத்து இராம் லல்லாவுக்கான ஆடைகளை வடிவமைக்கும்படி கூறினர். இதையடுத்து, அவர் கும்பாபிஷேக விழாவுக்கான இராம் லல்லாவுக்காக தனித்துவமான மஞ்சள் நிற ஆடையை வடிவமைத்து வருகிறார்.

Tags: AyodyaArun YogirajRam lalla StatueKarnataka Sculptor
ShareTweetSendShare
Previous Post

97.38 % 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன – ஆர்பிஐ தகவல்!

Next Post

‘சாலார்’ வெற்றிக்கு நன்றி தெரிவித்த பிரபாஸ்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies