ஆஸ்திரேலியா வீரரின் பொருள் திருட்டு - திருப்பி கொடுத்துவிடுங்கள் என்று கெஞ்சும் வீரர்!
Jul 24, 2025, 06:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலியா வீரரின் பொருள் திருட்டு – திருப்பி கொடுத்துவிடுங்கள் என்று கெஞ்சும் வீரர்!

Web Desk by Web Desk
Jan 2, 2024, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது கடைசி போட்டியில் விளையாடவுள்ள நிலையில் அவரது பையை யாரோ ஒருவர் திருடியுள்ளனர்.

ஆஸ்திரேலிய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் கடைசி போட்டி நாளை சிட்னியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். நாளை நடைபெறும் போட்டியே டேவிட் வார்னரின் கடைசிப் போட்டியாக உள்ளது.

இந்நிலையில் டேவிட் வார்னரின் பையை யாரோ ஒருவர் திருடிய சம்பவம் நடந்துள்ளது. நாழி நடைபெறும் போட்டியில் பங்கேற்க வீர்ரகள் மெல்போர்னில் இருந்து சிட்னிக்குச் சென்ற போது அதன் இடையே அவரது பை காணாமல் போயுள்ளது.

அந்தப் பையில் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளில் அணியும் தொப்பி உள்ளது. ஆஸ்திரேலியா வீரர்களைப் பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளுக்கு என பிரத்தியேகமாக அளிக்கப்படும் பச்சை நிற தொப்பி அவர்களுக்கு மிகப் பெரும் கவுரவமான ஒன்று.

திருடப்பட்ட அந்த பையில் அவரது இரண்டு பச்சை நிற தொப்பி உள்ளது. அதில் ஒன்று அவருக்கு முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன போது அளிக்கப்பட்டது. அதை அணிந்து தன் கடைசி போட்டியில் ஆட வேண்டும் என நினைத்து இருந்த வார்னர் தற்போது சோகத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில், அவர் தனது பையைத் திரும்ப ஒப்படைக்குமாறு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். “என் லக்கேஜில் இருந்து என் பையை யாரோ ஒருவர் எடுத்து இருக்கிறார்கள்.

அதில் என் குழந்தைகளுக்கு வாங்கிய சில பரிசுப் பொருட்கள் உள்ளன. அதில் தான் என் பச்சை நிற தொப்பியும் உள்ளது. அது எனக்கு உணர்வுரீதியான ஒன்று. என் கடைசி டெஸ்ட் போட்டியில் அதை அணிந்து செல்ல வேண்டும் என விரும்புகிறேன்.” எனக் கூறி இருக்கிறார்.

மேலும் அவர், “உங்களுக்கு அது போன்ற பை தான் வேண்டும் என்றால் என்னிடம் ஒரு பை உள்ளது, அதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது ” என முகம் தெரியாத திருடனிடம் கோரிக்கை வைத்துள்ளார் வார்னர்.

Tags: AustraliaDavid Warner
ShareTweetSendShare
Previous Post

திருச்சி விமான நிலைய புதிய முனையம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Next Post

இந்திய மகளிர் அணி முன்னேறியுள்ளது – தீப்தி சர்மா!

Related News

ஆஸ்திரேலியாவில் இந்து கோயிலில் இனவெறி வாசகம் : மர்ம நபர்கள் அட்டூழியம்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

பெண்ணுக்கு சிக்கலான எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை வெற்றி : சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை!

Load More

அண்மைச் செய்திகள்

2020-ம் ஆண்டுக்கு பின்னர் 22 செயற்கைக் கோள்களை செலுத்தி இஸ்ரோ சாதனை!

சென்னை ஆலந்தூரில் ஏழு வயது சிறுமி கொலை : மூன்று பேர் மீது வழக்குப்பதிவு!

பெங்களூரு விமான நிலைய ஓட்டல் சிற்றுண்டியில் கரப்பான் பூச்சி!

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி : நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

நாடாளுமன்ற முடக்கத்தால் ரூ.25 கோடி வரிப்பணம் வீண்!

அல் -கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது – குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார்!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் அமளி – 4-வது நாளாக இரு அவைகளும் ஒத்திவைப்பு!

மேற்கு வங்கத்தில் பொருளாதார பின்னடைவு ஏற்படும் அபாயம்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies