தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சாலார் படம் விமர்சம் ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும், அதிக வசூல் குவிந்ததால் ரசிகர்களுக்கு நடிகர் பிரபாஸ் நன்றி கூறியுள்ளார்.
பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பின் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த தெலுங்கு நடிகர் பிரபாஸ் மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கிய சாலார் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். வில்லனாக பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்படப் பலர் நடித்துள்ளனர்.
சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாள ஆகிய மொழிகளில் டிசம்பர் 22 அன்று வெளியானது.
இப்படம் தமிழகம், கர்நாடகா, கேரளா, வட இந்தியா மாநிலங்களில் எதிர்பார்த்த வரவேற்பையும், வசூலையும் பெறவில்லை. இருப்பினும் உலகம் முழுவதும் 625 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு நடிகர் பிரபாஸ் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” கான்சார்’ தலைவிதியை நான் தீர்மானிக்கும் போது, நீங்கள் அனைவரும் அமர்ந்து புத்தாண்டை அருமையாகக் கொண்டாடுங்கள் டார்லிங்ஸ். ‘சாலார்’ படத்தை சொந்தமாக்கி அதை பெரிய வெற்றி பெற வைத்ததற்கு நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மாநிலங்கள் தவிர பிற மாநிலங்களில் வசூல் அதிகம் இல்லையென்றாலும் வெளிநாடுகளில் வரவேற்பைப் பெற்றதாலும் இப்படம் 600 கோடி வசூலைக் கடந்துள்ளது.