இங்கிலாந்தில் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கம் குடும்பத்தினரை அழைத்து வருவதற்கான கட்டுப்பாடுகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
சமீப ஆண்டுகளில் இங்கிலாந்தில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இங்கிலாந்து நாட்டில் மக்கள் தொகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே குடியிருப்பவர்கள் மூலமாக நாட்டிற்குள் வருபவர்களை தடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான புதிய விசா கட்டுப்பாடுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்து வர கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்த நடைமுறை ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன் மூலம் சுமார் 3 லட்சம் பேர் நாட்டுக்குள் நுழைவதை தடுக்க முடியும் என இங்கிலாந்து அரசு எதிர்பார்க்கிறது. முதுகலை ஆராய்ச்சிப் படிப்புகளில் சேருபவர்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் உதவித்தொகையைத் தவிர அனைத்து வெளிநாட்டு மாணவர்களையும் இந்தக் கட்டுப்பாடு பாதிக்கும் என கூறப்படுகிறது
குறிப்பாக இந்த முடிவு இங்கிலாந்தில் உள்ள மிகப்பெரிய சர்வதேச மாணவர் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான இந்திய பிரஜைகளை பாதிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.