திருச்சியில் ரூ.1,100 கோடியில் கட்டப்பட்டுள்ள 2வது பன்னாட்டு விமான முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
திருச்சி விமான நிலையத்தில் உள்ள சிறப்புகள் குறித்து இதில் காண்போம்,
சென்னை விமான நிலையத்துக்கு அடுத்தபடியாக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய முனையம் இது வாகும்.
புதிய முனையத்தில் தமிழகக் கலாச்சாரம், பண்பாடு மற்றும் திருவிழாக்களை மையமாகக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
60,723 ச.மீ பரப்பில் 2 அடுக்குகளுடன் உருவாக்கப்பட்டுள்ள முனையம், ஒரே நேரத்தில் 4000 பன்னாட்டு பயணிகளை கையாளலாம்.
1500 உள்நாட்டு பயணிகளையும் கையாளக்கூடிய வகையில் 40 செக் அவுட் மற்றும் 48 செக்கிங் கவுண்டர்களைக் கொண்டுள்ளது.
விமானங்களை நிறுத்த 10 ஏப்ரான்கள், ஏரோ பிரிட்ஜ், 26 இடங்களில் மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுங்கத்துறையினருக்கென 3 சோதனை மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகளுடன், விமான நிலைய வளாகத்தில் 1,000 கார்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம் அகை்கப்பட்டுள்ளது.
சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் விமான நிலையத்தின் மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது.
ரூ.75 கோடியில் 42.5 மீட்டர் உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரத்துடன் கூடிய வான் கட்டுப்பாட்டு அறை கட்டப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வடிவம் முனையத்தின் முன் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. தேர் வடிவம் உள்ளிட்ட ஓவியங்கள் முனையத்தை மேலும் அழகாக்குகின்றன.
சுற்றுச்சூழலுக்கு ஏற்றவகையில் இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது. வருகைகளில் நுழைவதற்கு ராஜகோபுரம் போன்ற அமைப்பும் உள்ளது.