டோக்கியோ விமான நிலையத்தில் 400 பயணிகளுடன் வந்த விமானம் ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்தது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ (Tokyo-Haneda Airport) விமான நிலையத்தில் கடலோர காவல் படை விமானத்துடன், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
சம்ப இடத்தில் மீட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, விமானத்தில் இருந்த 367 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஜப்பான் கடலோர காவல்படை விமானத்தில் இருந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
முன்னதாக, நேற்று ஜப்பானின் மத்திய மாகாணங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.4 ஆக பதிவானதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 1 லட்சத்திற்கும் குறைவான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.