அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் பாஜக எம்எல்ஏ யஷ்பால் சுவர்ணா வலியுறுத்தியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ஜனவரி 1ம் தேதி பாஜக எம்எல்ஏ யஷ்பால் சுவர்ணா, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ஜனவரி 22ஆம் தேதியை விடுமுறையாக அறிவிக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து முதல்வர் சுவர்ணா எழுதியுள்ள கடிதத்தில், ராம ஜென்மபூமி போராட்ட வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பூஜை, பஜனை நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும். முதல்வர் என்ற முறையில் அவரிடம் முறையிட்டோம். விடுப்பு கொடுப்பதும் கொடுக்காததும் அவரவர் விருப்பம் என்றார்.
இந்தியா ஒரு இந்து தேசம், மாநிலத்தில் ஆறரை கோடி இந்துக்கள் உள்ளனர். மாநில மக்களின் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம். கோரிக்கையை ஏற்று விடுமுறை அறிவிப்பது நல்லது என்றும் அவர் கூறினார்.
எது சரி எது தவறு என்று சித்தராமையாவுக்கு தெரியும். சித்தராமையா ஓய்வு பெறும் தருவாயில் உள்ளார். அவர் இனிய ஓய்வு பெற வாழ்த்துகிறேன் என்று கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.