கடந்த 2020 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீராமர் கோவில் பூமி பூஜை போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2.27 ஏக்கர் பரப்பளவில் மூன்று அடுக்கில் உருவாகி வரும் ஸ்ரீராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில், கோவில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. திருக்கோவிலை பாரதப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிலையில், சென்னையில், திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் சேகர்ரெட்டிக்கு, ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பிரகாஷ், இராம இராஜசேகர் கும்பாபிஷேக அழைப்பிதழ், ஸ்ரீராமர் படம், அட்சதை வழங்கினர்.