மேற்கு வங்கத்தில் நேற்று இரவு 10.55 மணிக்கு 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. அலிபுர்டுவார் பகுதியில் இரவு 10.55 மணிக்கு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 5 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அலிபுர்வடுவார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.