முற்காலத்திலேயே, தமிழ் மண்ணில் பெண்கள் வீரத்திலும், விவேகத்திலும் சிறந்து விளங்கினர் என்பதற்கு, வேலு நாச்சியார் அவர்கள் வாழ்க்கையே சாட்சி எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இராணி வேலு நாச்சியார் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார். இவர் 1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து விஜயரகுநாத சேதுபதி – சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாக பிறந்தா . இவரை ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். மேலும் இவர் பல மொழிகள் கற்றார் ஆயுதப் பயிற்சி பெற்றார்.
18 ஆம் நூற்றாண்டில், தென்னிந்தியாவில் இருந்த அரசிகளில் ஒருவர், வேலு நாச்சியார். அவர் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக போராட்டம் செய்து, இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடினார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய முதல் இந்திய மகாராணி, வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த தினம் இன்று.
ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய முதல் இந்திய மகாராணி, வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த தினம் இன்று.
பன்மொழிப் புலமை பெற்றவர். போர்க் கலைகள் கற்றவர். முற்காலத்திலேயே, தமிழ் மண்ணில் பெண்கள் வீரத்திலும், விவேகத்திலும் சிறந்து விளங்கினர் என்பதற்கு, வேலு நாச்சியார் அவர்கள்… pic.twitter.com/fUaX6eYkyL
— K.Annamalai (@annamalai_k) January 3, 2024
பன்மொழிப் புலமை பெற்றவர். போர்க் கலைகள் கற்றவர். முற்காலத்திலேயே, தமிழ் மண்ணில் பெண்கள் வீரத்திலும், விவேகத்திலும் சிறந்து விளங்கினர் என்பதற்கு, வேலு நாச்சியார் அவர்கள் வாழ்க்கையே சாட்சி.
அறத்திற்கும் மறத்திற்கும் பெயர்பெற்ற வீரமங்கை வேலு நாச்சியார் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.