சீனாவில் உள்ளது போன்று சென்னையிலும் மெட்ரோ ரயில் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் 12 மாடிக் கட்டடத்தில் அமையும் வகையில் வடிவமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் மெட்ரோ ரயில் அடுக்குமாடிக்குள் செல்வதை பார்த்திருப்போம். அதுபோன்று தற்போது நம் இந்தியாவிலும் வரவுள்ளது, அதிலும் சென்னையில் வரவுள்ளது.
சென்னை திருமங்கலத்தில் இன்னும் சில ஆண்டுகளில் மெட்ரோ ரயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு தளத்திற்குள் செல்லும் வாய்ப்புள்ளது.
அதாவது, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட ரயில் திட்டத்தில் திருமயிலை பகுதியில் ஒரு 12 மாடிக் கட்டடத்தின் மூன்றாவது மாடியில், மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு, அந்த கட்டடத்துக்குள் ரயில் நின்று செல்லும் வகையில் ரயில் நிலையமும் அமையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோயம்பேடு, திருமயிலை பகுதிகளிலும், ரயில் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் 12 மாடிக் கட்டடத்தில் அமையும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.