அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.35,000 கோடி மதிப்புள்ள பன்முக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
Jul 4, 2025, 11:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.35,000 கோடி மதிப்புள்ள பன்முக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Web Desk by Web Desk
Jan 3, 2024, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.35,000 கோடி மதிப்புள்ள பன்முக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்க ரயில்வே விகாஸ் நிகாம் உடன் ஆர்.இ.சி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் (ஆர்.இ.சி நிறுவனம்) அடுத்த 5 ஆண்டுகளில், ஆர்.வி.என்.எல் நிறுவனம் செயல்படுத்தவுள்ள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.35,000 கோடி வரை நிதியளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்தத் திட்டங்கள் பன்னோக்கு போக்குவரத்துத் திட்டங்கள், ரயில் உள்கட்டமைப்பு திட்டங்கள், சாலை, துறைமுகம் மற்றும் ஆர்.வி.என்.எல் தொடர்புடைய மெட்ரோ திட்டங்களை உள்ளடக்கியது.

கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தின் (ஆர்.இ.சி.) நிதிப்பிரிவு இயக்குநர்  அஜய் சவுத்ரி மற்றும் ஆர்.வி.என்.எல்  நிறுவனத்தின் செயல்பாடுகள் பிரிவு இயக்குநர் ராஜேஷ் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

எரிசக்தி அமைச்சகத்தின் கீழ், 1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான ஆர்.இ.சி, உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனங்கள், பேட்டரி சேமிப்பு மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய மின்-உள்கட்டமைப்பு துறைக்கு நீண்டகாலக் கடன்கள் மற்றும் பிற நிதிச் சேவைகளை வழங்குகிறது.

எஃகு மற்றும் சுத்திகரிப்பு போன்ற பல்வேறு துறைகள் தொடர்பாக சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகள், மெட்ரோ ரயில், விமான நிலையங்கள், தகவல் தொழில்நுட்ப தகவல்தொடர்பு, சமூக மற்றும் வணிக உள்கட்டமைப்புப் பணிகளை உள்ளடக்கிய மின்சாரம் அல்லாத உள்கட்டமைப்புத் துறையிலும் ஆர்.இ.சி பன்முகச் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான ஆர்.வி.என்.எல், இந்திய ரயில்வேயின் உள்கட்டமைப்பு தேவைகளில் சுமார் 30 சதவீதத்தைப்  பூர்த்தி செய்கிறது. பொதுத்துறை தனியார் கூட்டு செயல்பாட்டின் கீழ் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடியாக உள்ளது. ஆர்.வி.என்.எல் முதன்மையாக ரயில்வே திட்டங்களை மேற்கொள்கிறது.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

ஓய்வு ஊதிய தொகைக்கு இனி குழந்தை பெயரை பரிந்துரைக்கலாம்! – மத்திய அரசு

Next Post

கர்னி சேனா தலைவர் கொலை: 31 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies