உத்தரகாண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம் பித்தோரகர் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பித்தோரகர் பகுதியில் மதியம் 12.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 5 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டது.
இதேபோல், மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பால்கர் பகுதியில் மதியம் 1.00 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 6 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இரு மாநிலங்களிலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.