இந்திய அணியின் சிறந்த 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் யார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பதில் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் தான் வெங்கடேஷ் பிரசாத். இவர் இந்திய அணிக்காக 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்களும், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் இவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது அதில் ஒரு ரசிகர் இந்தியாவின் ஆல் டைம் சிறந்த 5 பேட்ஸ்மேன்கள் யார் என்று கேட்டார்.
#AskVenky According to you who is five most prolific test batsmen India ever have ?
— Rahul Kumar (@rahuljjp) December 31, 2023
அதற்கு பதில் அளித்து வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்ட பதிவில், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக், விராட் கோலி தான் இந்தியாவின் ஆல் டைம் 5 சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று பதிவிட்டுள்ளார்.
அதேவேளையில், இந்திய அணியின் முன்னாள் வீர்ரகளான VVS லக்ஷ்மண் மற்றும் சவுரவ் கங்குலி பெயர்கள் அதில் இல்லாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், பெரும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.