நடிகர் அஜித் தனது பெண் ரசிகையுடன் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தையும் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. அங்கு சுமார் இரண்டு மாதங்கள் இடைவிடாமல் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் குடும்பத்துடன் துபாய்க்கு சென்றார் அஜித். அங்கு தனது மனைவி ஷாலினி மற்றும் மகன், மகளுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துபாயில் குடும்பத்துடன் ஜாலியாக கப்பலில் உலா வந்த அஜித்தை பார்த்ததும் ரசிகர்கள் தல, தல என ஆவலோடு கத்தியதை கேட்டு அவர்களுக்கு கப்பலில் இருந்தவாரே அஜித் கையசைத்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக பரவியது.
Thala Takker Doi 😍#Ak #AjithKumar pic.twitter.com/JNELroY8we
— AK (@iam_K_A) January 3, 2024
இந்நிலையில் தற்போது தனது ரசிகையுடன் அஜித் நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அஜித் தனது ரசிகையுடன் சில்லா சில்லா பாடலுக்கு நடனம் ஆடுகிறார் அதற்கு அங்கு உள்ளவர்கள் கைதட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.