சென்னை திருவான்மியூரில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிட உள்ளோம். அதாவது, அமமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம்.
அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி ராஜினாமா செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
சசிகலா உள்ளிட்ட அனைவருக்குமே நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. கோடநாடு ரகசியங்களை உரிய நேரத்தில், உரிய இடத்தில் தெரியப்படுத்தப்படும்.