கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் பலியான பலியானா ஜெனரல் காசிம் சுலைமானியை நினைவு நாள் இன்று அந்த நாட்டில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அடுத்தடுத்து குண்டுவெடித்து 103 பேர் கொல்லப்பட்டனர்.
தென்கிழக்கு நகரமான கெர்மனில் நடந்த காசிம் சுலைமானியை நினைவு நாள் அனுசரிப்பின் போது முதலில் ஒரு குண்டு வெடித்ததாகவும், பின்னர் இரண்டாவது குண்டு வெடித்ததாகவும், ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இதில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இந்த குண்டு வெடிப்புகள் ஒரு “பயங்கரவாத தாக்குதல்” என்று கெர்மனின் துணை ஆளுநர் கூறியுள்ளார்.
குண்டுவெடிப்புகளில் குறைந்தது 170 பேர் காயமடைந்துள்ளதாகவும் மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானில் உள்ள செய்தி நிறுவனம், அந்த இடத்தில் “வெடிகுண்டுகளை ஏற்றிச் சென்ற இரண்டு பைகள் வெடித்துச் சிதறின” என்று கூறியுள்ளது.
“இந்த சம்பவத்தின் குற்றவாளிகள்… ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாகத் தெரிகிறது” என்று செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
10 நிமிட இடைவெளியில் குண்டுகள் வெடித்ததாக கெர்மன் மேயர் சயீத் தப்ரிஸி கூறியதாக ISNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அங்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்புகளில் படுகாயமடைந்த 173 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.