உத்தரகாண்ட் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அடுத்த 11 நாட்களுக்கு ராம் லீலா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதற்காக பல்வேறு கலாச்சார, பாரம்பரிய நாட்டுப்புற கலைகள் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அடுத்த 11 நாட்களுக்கு அயோத்தியில் ராம் லீலா நிகழ்ச்சி நடந்த ஏற்பாடு செய்துள்ளதனாக அம்மாநில முதல் யோகி ஆதித்யநாத் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, கர்நாடகா, சிக்கிம், கேரளா, சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் சண்டிகர் போன்ற மாநிலங்களில் இருந்து ராம் லீலா நிகழ்ச்சியை நடத்தும் குழுக்கள் ராமரின் வாழ்க்கையின் அடிப்படையில் பல்வேறு நாடகங்களை செய்து காட்டவுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் குழு அயோத்தியில் அடுத்த 11 நாட்களுக்கு ராம் லீலா நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். இதில் குறைந்தது 50 பெண்களாவது ராம் லீலா நாடகத்தில் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் அதில் அவர்கள் ராமர் மற்றும் ராவணன் வேடங்களில் நடிக்க உள்ளனர்.