பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்து வரும் பலூச் போராட்டங்களுக்கு மத்தியில், துர்பத் மற்றும் கோஹ்லு மாவட்டங்களைச் சேர்ந்த 44 அரசு ஊழியர்களை பலுசிஸ்தான் அரசு இடைநீக்கம் செய்துள்ளது.
பலாச் மோலா பக்ஷின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நடத்தப்பட்ட பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக, 44 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
துர்பாத் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30 அரசு ஊழியர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கையை உறுதி செய்து மக்ரான் பிரிவு ஆணையர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற மாவட்ட புலனாய்வு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கோஹ்லு மாவட்டத்தில் 14 அரசு ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டனர். பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணிபுரியும் கல்வித் துறையைச் சேர்ந்த பெரும்பாலான ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.