பாரன்குயிலா நகரம் பாடகி சஹீரா மீது வைத்துள்ளது அன்பும், மரியாதையும் வெளிப்படுத்தும் விதமாக அவருக்கு 21 அடி உயரத்தில் வெண்கல சிலை ஒன்றை அந்நகரத்தில் வைத்துள்ளது.
1977-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி கொலம்பியாவின் பாரன்குயிலா நகரில் பிறந்தவர் சஹீரா இஸவேல் மெபாரக் ரிபோல்.
இவர் தனது எட்டாவது வயதில் தனது முதல் பாடலை எழுதி, பதின்மூன்று வயதில் ஆல்பம் வெளியிட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இவரது முதல் இரண்டு ஆல்பங்களும் வரவேற்பு பெறாமல் போக இவர் தனது மூன்றாவது ஆல்பத்தின் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் இவரே முழுக்கவனம் செலுத்தி, கடுமையாக உழைத்தார்.
1996-ஆம் ஆண்டு பிஸ் டெஸ்கல்சோஸ் (Pies Descalzos) என்ற பெயரில் வெளியான அந்த ஆல்பம் 3 மில்லியன் எண்ணிக்கையில் விற்றுத் தீர்ந்தன. அந்த ஆல்பத்தில் அவரது அரேபிய, கொலம்பிய முத்திரை பளிச்சென்று வெளிப்பட்டது.
முதலில் ஸ்பானிஷ் மொழியுலகில் மட்டுமே பிரபலமாக இருந்த இவர், வெகு சீக்கிரம் இசை ரசிகர்களைத் தனது கவர்ச்சி நடனத்தாலும் எல்லாவற்றுக்கும் மேலாக இனிமையான குரலாலும் தன்வசப்படுத்தினார்.
2010-ல் வெளியான இவரது ஆல்பத்தின் ஒரு பாடல்தான் “ஷமினா மினா ஓய்..ஓய்.. வக்கா..வக்கா ஓய்..ஓய்”. இந்தப் பாடல் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் தீம் பாடலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, தொடக்க நாள் நிகழ்ச்சியில் பாடி, ஆடி கவர்ந்தார். அப்பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.
இப்படி தனது கடின உழைப்பால் முன்னேறிய இவர் ஒரு காலகட்டத்தில் பாப் இசை உலகின் சூப்பர் ஸ்டாரானார். இப்படி தனது கடின உழைப்பால் முன்னேறிய இவருக்கு பாரன்குயிலா நகரத்தின் அரசு நிர்வாகம், நகரின் முக்கிய இடமான மக்டலேனா ஆற்றின் கரை அருகே 21 அடி உயரத்தில் (6 மீட்டர்) சஹீராவுக்கு வெண்கல சிலையை வைத்திருக்கிறது.
அதுவும் சஹீராவின் மிகப் பிரபலமான ‘ஹிப்ஸ் டோண்ட் லை’ ஆல்பத்தில் இடம்பெற்ற இடை அசைவு நடன தோற்றத்தில் இச்சிலை சஹீராவின் பெற்றோர் முன்னிலையில் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி திறக்கப்பட்டது.
இதன்மூலம் பாரன்குயிலா நகரம் அவர் மீது வைத்துள்ளது அன்பும், மரியாதையும் வெளிப்படுகிறது.