இராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு 108 அடி நீள அகர்பத்தி!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு 108 அடி நீள அகர்பத்தி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 3, 2024, 06:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வதோதராவில் தயாரிக்கப்பட்ட 108 அடி நீள அகர்பத்தி அயோத்தியை சென்றடைந்தது.

அயோத்தி இராமஜென்ம பூமியில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

அதேசமயம், அயோத்தி இராமர் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பூஜைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில், ஸ்ரீராமர் மற்றும் சீதா தேவியின் சிலைகளை வடிப்பதற்காக 2 ஷாலிகிராம் கற்கள் கடந்த 2023 ஜனவரி மாதம் நேபாளத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

அதேபோல, தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் இருந்து “ஜெய் ஸ்ரீராம்” என்று பொறிக்கப்பட்ட 620 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட மணி அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், ராஜஸ்தான் கைவினைஞர்களால் 8 அடி உயர தங்க முலாம் பூசப்பட்ட பளிங்கு சிம்மாசனமும் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

மேலும், சத்ய பிரகாஷ் ஷர்மா என்பவர், 30 கிலோ எடையுள்ள 4 அடி நீள சாவியுடன், 10 அடி உயரம், 4.5 அடி அகலம் மற்றும் 9.5 அங்குல தடிமன் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய பூட்டை வடிவமைத்து அனுப்பி இருக்கிறார். அதேபோல, குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 5,000 அமெரிக்க வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட நெக்லஸை வழங்கி இருக்கிறார்.

இந்த நிலையில்தான், குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து 108 அடி நீளம், 3.5 அடி அகலத்தில் தயாரிக்கப்பட்ட அகர்பத்தி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அகர்பத்தி 3,000 கிலோ கிர் பசுவின் சாணம், 91 கிலோ கிர் பசு நெய், 280 கிலோ தேவதாரு மர மரம், 376 கிலோ குகல், 280 கிலோ தால், 280 கிலோ ஜாவ், 370 கிலோ கொப்ரா கிரஷ் மற்றும் 425 கிலோ ஹவன் பொருட்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

3,500 கிலோ எடையுள்ள இந்த அகர்பத்தி, ட்ரெய்லரில் வதோதராவில் இருந்து அயோத்திக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. வதோதராவில் உள்ள தர்சாலியில் வசிக்கும் விஹாபாய் பர்வாத், கடந்த 6 மாதங்களாக முயற்சி செய்து இந்த அகர்பத்தியை தயாரித்திருக்கிறார்.

இவர் ஏற்கெனவே, 111 அடி நீளமான அகர்பத்தியை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

Tags: incense stickRam TempleAyodyainauguration108-feet long
Share
Tweet
SendShare
Previous Post

ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டங்கள் திண்டாட்டங்கள் மாற கூடாது! -ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

பாரன்குயிலாசவில் பாடகி சஹீராவுக்கு 21 அடி வெண்கல சிலை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies