இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய 98 ரன்கள் முன்னிலை உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
டி20 மற்றும் ஒரு தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் போட்டி நடைபெற்றது.
கேப்டவுனில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரராக ஐடன் மார்க்ராம் 2 ரன்களிலும், டீன் எல்கர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய அடுத்தடுத்து முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக கைல் வெர்ரைன் 15 ரன்களும், டேவிட் பெடிங்காம் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மற்ற வீரர்கள் 5 ரன்னை கூட தாண்டவில்லை, இதனால் தென் ஆப்பிரிக்கா அணி மொத்தமாக 55 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்களை வீழ்த்தினார். பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் களமிறங்கினர். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
ஜெய்ஸ்வால் ரன் ஏதும் டக் அவுட் ஆகா அவரைத் தொடர்ந்து விளையாடிவந்த ரோகித் சர்மா பௌண்டரியஸாக அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
ரோகித் சர்மா 7 பௌண்டரிஸ் அடித்து 50 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து விளையாடி வந்த சுப்மன் கில் 5 பௌண்டரீஸ் அடித்து 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய விராட் கோலி 6 பௌண்டரீஸ் 1 சிக்சர் என 46 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் மற்ற வீரர்கள் டக் அவுட் ஆனார். இதனால் இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 153 ரன்களை மட்டுமே எடுத்து.
தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக நந்த்ரே பர்கர, லுங்கி, ககிசோ ரபாடா ஆகியோர் 3 விக்கெட்களை வீழ்த்தினர். தற்போது இந்திய அணி 98 ரன்கள் முன்னிலையில் உள்ளது.