செந்தில் பாலாஜி வழக்கு - 900 பேர் குற்றவாளிகள் - போலீஸ் பகீர் தகவல்!
Mar 15, 2026, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கு – 900 பேர் குற்றவாளிகள் – போலீஸ் பகீர் தகவல்!

Murugesan M by Murugesan M
Jan 3, 2024, 08:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செந்தில் பாலாஜி வழக்கில் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கபட்டுள்ளதாக நீதிமன்றத்தில், மத்திய குற்றப் பிரிவு காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015 -ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது, போக்குவரத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் கணேஷ் குமார் என்பவர் புகார் அளித்தார். இதேபோல, பாதிக்கப்பட்ட பலரும் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில், செந்தில் பாலாஜி, அவரது நண்பர் பிரபு, சகாயராஜ், அன்னராஜ் ஆகியோர் மீது கடந்த 2017-ம் ஆண்டு நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில், செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

மேலும், இந்த வழக்கை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் குற்றப்பத்திரிகையின் பேரில், வழக்கை நடத்த, தமிழக அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை என்றார்.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 2-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Tags: chennai high courtdmk senthil balaji
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – தென் ஆப்பிரிக்கா : இந்தியா 98 ரன்கள் முன்னிலை!

Next Post

வாக்குறுதியை நிறைவேற்றிய பா.ஜ.க.: கேரளாவில் பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies