அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் கங்கை அமரன், குஷ்பு, பி.வாசு உள்ளிட்டோருக்கு நேரில் வழங்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது. பகவான் ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளிப் பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவரின் இல்லங்களிலும் தீபம் ஏற்றிக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக இசையமைப்பாளர்கள் கங்கை அமரன், சங்கர் கனேஷ், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, இயக்குநர்கள் பி.வாசு,சந்தானபாரதி, பேரரசு நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோருக்கு இராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் நேரில் வழங்கப்பட்டது.
ஆர் எஸ் எஸ் க்ஷேத்திர கோஷ்ப்ரமுக் MD சங்கர், டைரக்டர் ஷர்மா ஆகியோர் அழைப்பிதழ் மற்றும் ராமஜென்ம பூமி பிரசாதத்தையும் நேரில் வழங்கினர்.