அமலாக்கத்துறை வழக்கில் ஆஜராகாத பொன்முடி மகன் கவுதம சிகாமணி!
Jul 26, 2025, 01:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலாக்கத்துறை வழக்கில் ஆஜராகாத பொன்முடி மகன் கவுதம சிகாமணி!

Web Desk by Web Desk
Jan 4, 2024, 05:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவுசெய்ய இருந்த நிலையில் திமுக எம்.பி. கவுதம சிகாமணி ஆஜராகாததால், வழக்கின் விசாரணையை சென்னை அமர்வு நீதிமன்றம் ஜனவரி 24க்கு தள்ளிவைத்துள்ளது.

2006-2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை பதிவுசெய்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய நிலையில், செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறி, முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.

இந்தச் சூழ்நிலையில், சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தில் கள்ளக்குறிச்சி திமுக எம்.பி. கவுதம சிகாமணி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ் பிசினஸ் ஹவுஸ் நிறுவனம் ஆகிய ஆறு பேருக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பில் ஆகஸ்ட் மாதம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த (2023) நவம்பர் 24 தேதி நீதிமன்றத்தில் ஆஜரான கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, கவுதம சிகாமணி தவிர மற்றவர்கள் ஆஜராகி இருந்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ராஜ மகேந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளை, தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஆவணங்களில் ஒரு சில பக்கங்களில் உள்ள விவரங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும், அதுகுறித்து அமலாக்கத்துறை தெளிவுபடுத்த வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜனவரி 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: Ponmudi Son gowthama Sigamanidmk minister ponmudi
ShareTweetSendShare
Previous Post

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

Next Post

மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் குறித்து அறிவிப்பு!

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies