சேலம் இரும்பாலை தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு சேலம் இரும்பாலை, துர்காபூர் அலாய்ஸ் இரும்பு ஆலை, பத்ராவதிவிஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எஃகு ஆலையையும் தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இனையடுத்து சேலம் இரும்பாலை விறப்னைக்காக 2019ஆம் ஆண்டு சர்வதேச ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டது. இதில் ஏலம் கேட்டு பலர் விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும் பரிவர்த்தனையை தொடர அவர்கள் ஆர்வம் காட்டாததால், சேலம் இரும்பாலை விற்பனை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதேபோல், ஏலம் கேட்டவர்கள் பரிவர்த்தனையை தொடர ஆர்வம் காட்டாததால் கடந்த 2019ல் துர்காபூர் ஆலையை தனியார் மயமாக்கும் திட்டத்தை அரசு நிறுத்தி வைத்தது. அதை தொடர்ந்து 2022ல் விஸ்வேஸ்ரய்யா ஆலையை விற்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை பங்குகள் விற்பனை மூலம் ரூ.51,000 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது, ஆனால் இதுவரை ரூ.10,052 கோடி ஈட்டப்பட்டுள்ளது.