உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இராமர் கோவிலில் வருகின்ற 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நிகழ்வை தொடங்கி வைக்கிறார்.
இதற்கான துவக்க விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளதாக ராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஏராளமான முக்கிய பிரமுகர்கள் சினிமா நட்சத்திரங்கள் பிரபலங்கள் மடாதிபதிகள் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சாமியார்களுக்கும் நாடெங்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
ராமர் கோயிலின் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகத்தை சிறப்பிப்பதற்காக ஒரு லட்சம் பக்தர்கள் அயோத்தியில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கோயிலின் கட்டுமான பணிகள் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது.
இந்நிலையில் கோயிலின் சிறப்பம்சங்கள் மற்றும் அவற்றின் கட்டிடக்கலை ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை ராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர். இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
श्री राम जन्मभूमि मंदिर का भव्य सिंहद्वार
The Magnificent Sinh Dwar of Shri Ram Janmbhoomi Mandir.
📍Ayodhya pic.twitter.com/1BhjPpJh2N
— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) January 4, 2024
மூன்று அடுக்குகளைக் கொண்டதாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்துடன் கட்டப்பட்டிருக்கிறது. மேலும் ஒவ்வொரு தளத்திலும் 392 தூண்களும் 44 கதவுகளும் அமைக்கப்பட்டுள்ளது.
ஐந்து முதல் ஆறு அடி உயரத்தில் ராமர் சிலை வடிக்கப்பட்டு இருக்கிறது. ஜனவரி 17ஆம் தேதி அபிஷேகம் மற்றும் பூஜைக்காக ராமர் சிலை அயோத்தியில் உள்ள சரயு நதிக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.
அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் ஜனவரி பதினெட்டாம் தேதி ராமர் சிலை, கோவிலுக்கு எடுத்து வரப்படும். இதனைத் தொடர்ந்து கருவறையில் வைக்கப்படும் சிலைக்கு மூன்று நாட்கள் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளை தொடர்ந்து 22 ஆம் தேதி நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம் மற்றும் கோவில் திறப்பு விழாவிற்கு ராமர் சிலை தயார் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மூன்று அடுக்குகளைக் கொண்டதாக கட்டப்பட்டு இருக்கும் ராமர் கோவில் நகர் கலை என்று அழைக்கப்படும் பிரதான இந்து கட்டிடக்கலையை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கோவில் 250 அடி அகலமும் 161 அடி உயரமும் கொண்டதாக கட்டப்பட்டிருக்கிறது.
இந்தக் கோவிலின் ஒவ்வொரு அடுக்கும் 20 அடி உயரத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோவிலில் மொத்தமாக 392 தூண்களும் 44 கதவுகளும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கோவிலின் முதன்மையான கருவறையில் ஸ்ரீராமரின் திருவுருவச் சிலை நிறுவப்படும். மேலும் கோவிலின் முதலாவது மாடியில் ஸ்ரீராம் தர்பார் அமைக்கப்பட்டு இருக்கிறது.
ஸ்ரீ ராமர் கோவிலில் மொத்தமாக 5 மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிருத்ய மண்டபம், வண்ணங்களுக்கான மண்டபம்.
சபைகளுக்கான மண்டபம் இத்தனை மற்றும் பிரார்த்தனைகளுக்கான மண்டபம் மற்றும் ராமர் கோவில் என ஐந்து மண்டபங்களாக இது பிரிக்கப்பட்டு இருக்கிறது.
கடவுள்கள் மற்றும் பெண் தெய்வங்களின் சிலைகளும் கோவிலின் தூண்களிலும் சுவர்களிலும் வடிக்கப்பட்டு இருக்கின்றன. ராமர் கோவிலின் நுழைவு வாயில் 32 படிக்கட்டுகளைக் கொண்டதாக கிழக்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது. இராமர் கோயிலின் நுழைவாயில் சிங்க சிற்பம் உள்ளது.
மேலும் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிகளுக்காக மின் தூக்கிகளும் எஸ்கலேட்டர்களும் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீ ராமரின் ஆலயத்தை சுற்றிலும் 738 அடி அகலம் மற்றும் 14 அடி உயரத்தில் பாதுகாப்பா ரணகளாக மதில் சுவர்கள் கட்டப்பட்டிருக்கின்றன. மேலும் கோவிலுக்கு அருகில் வரலாற்று சிறப்புமிக்க சீதாப்பாட்டியாரின் கிணறும் அமைக்கப்பட்டுள்ளது.
இது பண்டைய கால வரலாற்று நினைவுகளை நினைவு கூறும் விதமாக அமைக்கப்பட்டிருப்பதாக கோவிலின் தர்மகர் தாக்கல் தெரிவித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பக்தர்கள் தங்கும் வசதி கொண்ட யாத்திரிகர்களுக்கான வசதி மையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு பொருள் பாதுகாப்பு அறை மற்றும் பக்தர்களுக்கான மருத்துவ உதவிகள் வழங்கப்படும் மையமும் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.