டி20 போட்டிகளில் விளையாடத் தயாராக இருக்கிறோம், என்று ரோகித் மற்றும் கோலி பிசிசிஐ-யிடம் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாடாமல் இருந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையில் அவர்கள் விளையாட மாட்டார்கள் என்று தகவல் வந்தது.
மேலும் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு இந்திய அணியைத் தேர்வு செய்ய இன்று பிசிசிஐ தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் தற்போது டி20 போட்டிகளில் விளையாட தாங்கள் தயாராக இருப்பதாக பிசிசிஐயிடம் ரோஹித் மற்றும் கோலி கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதில் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு குழப்பத்தில் உள்ளது.