வெற்றி குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரோகித்!
Oct 24, 2025, 02:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெற்றி குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரோகித்!

Web Desk by Web Desk
Jan 5, 2024, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற நினைத்தோம். ஆனால் கடைசி ஆறு விக்கெட் இழந்த விதம் நிச்சயம் வருத்தத்தை கொடுத்தது – ரோகித் சர்மா !

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நேற்று முடிவடைந்தது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் இரண்டு அணிகளுக்கும் கோப்பை சமமாக கொடுக்கப்பட்டது. இரண்டாவது போட்டியின் முதல் நாளில் 23 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் இரண்டாவது நாளில் 10 விக்கெட்கள் வீழ்ந்தது. இந்தப் போட்டியை பொறுத்தவரை பௌலர்களின் பங்கு அதிகமாக இருந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா போட்டியின் வெற்றியை குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர், “இந்த வெற்றியை நாங்கள் மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம்.

முதல் டெஸ்டில் நாங்கள் தோல்வி அடைந்தும் அதிலிருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம். தற்போது இரண்டாவது டெஸ்டில் எங்களுடைய பவுலர்கள் பிரமாதமாக செயல்பட்டார்கள். எங்களுடைய வீரர்கள் பல பிளான்களை போட்டு அதற்கான பரிசுகளை தற்போது பெற்றிருக்கிறார்கள்.

எங்களை நம்பி நாங்கள் விளையாடினோம். முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற நினைத்தோம். ஆனால் கடைசி ஆறு விக்கெட் இழந்த விதம் நிச்சயம் வருத்தத்தை கொடுத்தது. இந்தப் போட்டி மிகவும் குறுகிய போட்டியாக தான் இருக்கும் என நினைத்தோம். இதனால் ஒவ்வொரு இன்னிங்சும் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்தோம். இந்தப் போட்டியில் முன்னிலை பெறுவது என்பது மிகவும் முக்கியமாக இருந்தது.

சிராஜ் இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் செயல்பட்ட விதம் ஸ்பெஷலானது. இதை நாம் தினம் தினம் பார்க்க முடியாது. நாங்கள் இந்தப் போட்டியை சிம்பிளாக தான் எதிர்கொண்டோம். ஆடுகளமும் எங்களுக்கு நன்றாக ஒத்துழைத்தது. எங்களுடைய பவுலர்கள் சிராஜ், பும்ரா, முகேஷ் மற்றும் பிரசித் கிருஷ்ணா என அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்னாப்பிரிக்காவுக்கு யார் வந்தாலும் இது கடும் சவால்களை கொடுக்கும் ஆடுகளமாக இருக்கிறது. இந்தியாவுக்கு வெளியே தற்போது நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். இதனை நினைக்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த தொடரை நாங்கள் வென்று இருக்க முயற்சி செய்தோம். ஆனால் தென்னாப்பிரிக்கா உண்மையிலேயே சிறந்த அணி.

அவர்கள் கடும் சவால்களை எங்களுக்கு கொடுத்தார்கள். ஒரு நல்ல அணியை எதிர்கொண்டு தொடரை சமன் செய்தது திருப்தி அளிக்கிறது. டீன் ஏல்கார் தென்னாபிரிக்க அணியின் மிக முக்கியமான வீரராக இருந்தார். அவருடைய ஓய்வு வாழ்க்கை சிறந்ததாக அமைய நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

Tags: rohith sharmaindia vs southafricatest cricket
ShareTweetSendShare
Previous Post

நேரு செய்த தவறுகள்: ப்ரியம் காந்தி மோடி புத்தகம்!

Next Post

மிசோரமில் திடீர் நிலநடுக்கம் – மக்கள் அச்சம்!

Related News

கொடைக்கானல் : அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்!

அமெரிக்காவின் தேசியக் கடன் ரூ.3,339 லட்சம் கோடியாக அதிகரிப்பு – அமெரிக்கர்களின் தலையில் ரூ.1 கோடி ரூபாய் கடன்!

பணி நீக்கப்பட்ட மெட்டா ஊழியர்களுக்கு வாய்ப்பளித்த சுதர்ஷன் காமத்!

மருது சகோதரர்களின் குருபூஜை : அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

டெல்லியில் தொடர்ந்து மோசமடையும் காற்றின் தரம்!

மத்தியப் பிரதேசத்தில் 14 சிறுவர்களின் பார்வை பறித்த கார்பைட் துப்பாக்கி!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானில் தக்காளியின் விலை 400% வரை உயர்வு!

மதுரை : நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்!

நெல்லை : பாம்பு கடித்து மாணவன் மருத்துவமனையில் அனுமதி!

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை – 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்!

மலேசியா : இடுப்பளவு தண்ணீரில் குழந்தைகளை ஏந்தி நிற்கும் பெற்றோர்!

சர்ச்சை கருத்து – பொன்முடி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

விமானங்களில் பவர் பேங்க் கொண்டு செல்லத் தடை? – சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பரிசீலனை!

அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டால் வலுவான பதிலடி இருக்கும் : ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை!

டிராவல்ஸ் உரிமையாளர் கொலை : 3வது நாளாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

பழுதான சாலைகளில் புதைந்து நிற்கும் வாகனங்கள் – போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies