இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று மும்பையில் தொடங்குகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இதில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது டி20 தொடர் இன்று மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும்.
இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் கடைசியாக விளையாடிய 5 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா நான்கு போட்டிகள் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள ஒரு போட்டி டை-யில் முடிந்துள்ளது.
மேலும் இப்போட்டியை குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ” நாங்கள் அவ்வப்போது மிகவும் சிறப்பாக விளையாடுகிறோம். பீல்டிங் மற்றும் உடல்தகுதி பிரச்சினை குறித்து நீண்ட நாட்களாக பேசி வருகிறோம். அதில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். அந்த முயற்சிக்கு ஒரே மாதத்தில் பலன் கிடைப்பது என்பது கடினம்.
எங்களது ஆட்டத்தில் உள்ள தவறுகளை நாளுக்கு நாள் குறைத்தால் அணியின் செயல்பாடு சிறப்பானதாக இருக்கும். நான் மோசமான ஷாட் ஆடி ஆட்டமிழக்கவில்லை. வரும் போட்டிகள் முக்கியமானதாகும். அதற்காக நான் அதிக நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டேன். நான் கணிசமாக ரன் எடுத்தால் அது அணிக்கு நல்லதாக அமையும்” என்று கூறினார்.
மேலும் இப்போட்டியில் இந்தியா 35% வெற்றி பெறும் என்றும் ஆஸ்திரேலியா 65% வெற்றி பெறும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.