லாட்டரி சீட்டில் எப்படி பணம் வெல்வது என்பதை குறித்து பிரிட்டன் நாட்டை சேர்ந்த இரு கணிதவியலாளர்கள் அதற்கான முறையை கண்டுபிடித்துள்ளனர்.
சினிமாவில் ஒரே பாடலில் பணக்காரராவது எல்லாம் பார்த்திருப்போம். நம்மில் அனைவரும் நம் வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒரே இரவில் பணக்காரராக வேண்டும் என்று நினைத்திருப்போம்.
இதை பற்றி யோசித்தால் அது நடக்கதாக காரியம் தான் ஆனால் இதுவும் நடத்தி காட்ட முடியும் என்று மக்களுக்கு நம்மிக்கை கொடுத்தது என்றால் அது தான் லாட்டரி சீட்டு. லாட்டரி மூலம் மக்கள் நிறைய சம்பாதித்தும் இருக்கிறார்கள் அதே அளவு இழந்தும் இருக்கிறார்கள்.
லாட்டரி நமக்கு அடிக்க வேண்டும் என்றால் லக் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இரண்டு பிரிட்டிஷ் கணிதவியலாளர்கள் லாட்டரி தொடர்பாக முக்கிய கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர்.
பொதுவாக லாட்டரியில் யாருக்குப் பரிசு கிடைக்கும் என்பதே தெரியாது. அதுவே லாட்டரியின் தனித்துவம். ஆனால், இவர்கள் அதையே முறியடித்துவிட்டனர்.
பிரிட்டன் லாட்டரியை பொறுத்தவரை அங்கே மொத்தம் 4.5 கோடி கம்பினேஷன்கள் இருக்கும். ஆனால், நாம் பரிசு வாங்க நாம் வெறும் 27 டிக்கெட்டுகளை வாங்கினால் போதும் என்பதை கணிதவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த 27 லாட்டரி சீட்டுகளை வாங்குவதன் மூலம் கட்டாயம் நமக்கு ஒரு பரிசு கிடைக்குமாம். இது தொடர்பாக அவர்கள் தங்கள் ஆய்வு முடிவையும் ஆய்விதழில் வெளியிட்டு இருந்தனர். அவர்களின் இந்த கண்டுபிடிப்பு உலகெங்கும் பேசப்பட்டது.
இருப்பினும், 27 டிக்கெட்களை வாங்கிய அனைவராலும் வெல்ல முடிவதில்லையாம். உலகெங்கும் இதுபோல 27 லாட்டரி சீட்டுகளை வாங்கியவர்களுக்கு வெவ்வேறு முடிவுகளே கிடைத்துள்ளது. இதனால் பலரும் இணையத்தில் அந்த கணிதவியலாளர்களிடம் கேள்வி எழுப்பதொடங்கினர். இதனால் அதற்கான விளக்கத்தை அவர்கள் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள், ” பிரிட்டன் நேஷனல் லாட்டரியில், வீரர்கள் 1 முதல் 59 வரையிலான ஆறு வெவ்வேறு எண்களைத் தேர்வு செய்வார்கள், லாட்டரி டிராவின் போது,1 முதல் 59 வரையிலான எண்ணிக்கை தேர்வு செய்யப்படும். அதில் 5 எண்களையும் வாங்கிய நபர்களுக்கு மெகா ஜாக்பாட் கிடைக்கும்.
அதேநேரம் அதில் இரண்டு எண்களாவது உங்களுக்கு இருந்தால் குறைந்தபட்ச பரிசாவது கிடைக்கும். இதில் மொத்தம் 45,057, 474 சாத்தியமான காம்பினேஷன்கள் இருந்தாலும் 27 டிக்கெட்டுகளை வாங்கினால் போதும் குறைந்தபட்ச பரிசையாவது வாங்க முடியும்.
அதேபோல நீங்கள் குறைந்தது 27 டிக்கெட்களை வாங்க வேண்டும். ஒன்று குறைவாக 26 வாங்கினாலும் உங்களால் குறைந்தபட்ச பரிசை கூட வெல்ல முடியாது” என்றார்கள்.
குறைந்தபட்சம் எத்தனை லாட்டரி டிக்கெட்களை வாங்க வேண்டும் என்பதை finite geometry என்ற முறையைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். தீவிர ஆய்வுக்குப் பின்னரே எத்தனை காம்பினேஷன்கள் வந்தாலும் குறைந்தது 27 டிக்கெட்களை பெற்று வெல்ல முடியும் என்பதை இவர்கள் உறுதி செய்துள்ளனர்.
உண்மை என்னவென்றால், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் ஸ்டீவர்ட் மற்றும் டேவிட் குஷிங் ஆகிய இரண்டு கணிதவியலாளர்கள் 27 லாட்டரி சீட்டுகளை வாங்கினால் ஜாக்பாட் வரும் எனக் கூறவில்லை. மாறாகக் குறைந்தபட்ச பரிசாவது கிடைக்கும் என்றே கூறியிருந்தனர்.
அதையே பலரும் தவறா புரிந்து கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் சொன்னது பிரிட்டன் லாட்டரி முறைக்குத்தான். மற்ற நாடுகளின் லாட்டரியில் வேறு முறை பின்பற்றப்படும் என்பதால் அங்கே இவை செயல்படுத்த முடியாது.