இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வெளிநாட்டு பிட்ச்களில் பேட்டிங் செய்யத் தெரியாது என பிற நாட்டு ஊடகங்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய தலா 1 வெற்றி மற்றும் தோல்வியை அடைந்துள்ளது. இதழ் கேப்டவுனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பிட்ச் மிகவும் கடுமையானது.
அதன் பிட்சில் இந்திய வீரர்கள் தென் ஆப்பிரிக்கா வீரர்களை விட சிறப்பாகவே விளையாடினர். இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பேட்டிங் செய்ய தெரியாது என்ற விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் இது பற்றிப் பேசிய கவாஸ்கர், பொதுவாக இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் வேகப் பந்துவீச்சில், பவுன்ஸ் ஆகும் பிட்ச்களில் ஆடத் தெரியாதவர்கள் என்று தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் எழுதி வருகின்றன.
வேகப் பந்துவீச்சில் பேட்டிங் செய்யத் தெரியவில்லை என்றால் அவர்கள் பேட்ஸ்மேன்களே இல்லை என்கிறார்கள். அதே போல, இந்தியாவில் வெளிநாட்டு வீரர்களால் ஸ்பின் பந்துவீச்சில் ஆடத் தெரியவில்லை என்றால் அவர்களும் பேட்ஸ்மேன்களே இல்லை என வைத்துக் கொள்ளலாம்.
ஆனால், இந்திய ஊடகங்கள் அப்படி விமர்சனம் செய்வதில்லை என காட்டமாக பேசியுள்ளார் .