1967 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி இசைக்காகவே பிறந்தவர் தான் ஏ.ஆர்.ரஹ்மான். இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இவர்.
ஒரே படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இவர், மணிரத்னம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தார்.
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் பிறந்து மலையாள சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் ஆர்.கே.சேகர். இவரது மகன் தான் ஏ.ஆர்.ரஹ்மான். 4 வயதில் பியோனோ வாசிக்க தொடங்கியுள்ளார். அப்போதே தனது தந்தையின் ஸ்டூடியோவில் அவருக்கு உதவியா கீபோர்டு வாசித்துள்ளார்.
பின்னர் எம்.எஸ். விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதனிடமும் பணி புரிந்தார். மேற்கத்திய இசையை மாஸ்டர் தன்ராஜிடம் கற்றார். நிறைய விளம்பர படங்களுக்கு இசை அமைத்தார்.
இவர் ரோஜாவில் ஆரம்பித்த பயணம் புயல் வேகமாக இந்திய எல்லைகளை கடந்து உலகெங்கும் பரவியது. இசைக்கு ஏது மொழி என்பது போல தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று தனது எல்லையை விரித்தார்.
இவர் பலமுறை பிலிம்பேர் விருதுகள், பல மாநில அரசு விருதுகள், பல முறை தேசிய விருதுகளை இவரின் கைகள் சுமந்தன. “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற ஆங்கில படத்தில் இசை அமைத்ததற்காக கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருதுகளை பெற்ற முதல் இந்தியர் ஆவார்.
இதே படம் ஆஸ்கார் விருதையும் பெற்று தந்தது. உலகின் எந்த விழா மேடையிலும் “எல்லா புகழும் இறைவனுக்கே” என்ற வார்த்தைகளை சொல்லி விட்டு தான் பேச ஆரம்பிப்பார்.
கிராமிய இசை முதல் மேற்கத்திய இசை வரை தனது இசையால் தனித்து தெரிபவர். இசையில் புதுமையை கொண்டு வந்தவர். திரைப்படம் மட்டும் இன்றி தனிப் பாடல்களை ஆல்பமாக வெளியிடுவதும் இசைக்கச்சேரிகள் நடத்தவும் செய்கிறார்.
ஜனம் தமிழ் சார்பாக இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.