பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஓலிவர் குட்டி விமானத்தில் பயணம் செய்தபோது எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளாகியது.
51 வயதுடைய ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஓலிவர் ஜெர்மனி நாட்டினை பூர்வீகமாக கொண்டவர். இவர் கோப்ரா 11 என்ற தொலைகாட்சி தொடரில் நடித்து பிரபலமானார்.
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் திரைத்துறையில் பணியாற்றி வரும் ஓலிவர், ஸ்பீட் ரேசர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர் கரீபியன் தீவுகளுக்கு குடும்பத்துடன் விடுமுறை கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த போது ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.
இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் குட்டி விமானத்தில் பயணம் செய்தார். விமானம் புறப்பட்ட கரீபியன் கடல் பகுதியில் சென்றபோது விபத்துக்குள்ளாகி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கடற்படை அதிகாரிகள், மீனவர்கள், கடல் நீருக்கு அடியில் சென்று தேடும் வீரர்கள் உள்ளிட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டு நான்கு உடல்களை மீட்டுள்ளனர்.
ஓலிவர், அவரது மகள்கள் மதிதா (10), அன்னிக் (12) மற்றும் விமான ஓட்டுநர் என நான்கு பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். விமானம் பெகுய்யா என்ன சிறிய தீவில் இருந்து செயின்ட் லூசியா புறப்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.