அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது பணியில் இருக்கும் காவல்துறையினர் ஸ்மார்ட் போன் பயன்படுத்த கூடாது என காவல்துறை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல பிரபலங்கள் வி.ஐ.பி -கள் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் கும்பாபிஷேக விழாவிற்காக பணியமர்த்தப்பட்டுள்ள காவல்துறையினருக்கு ஒரு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச காவல்துறை சிறப்பு இயக்குநர் ஜெனரல் பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.
அதன்படி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பணியில் இருக்கும் காவல்துறையினர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளார்.