வரும் 19-ம் தேதி தேதி, பிரதமர் மோடி, தமிழகம் வருகை தர இருந்த பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 19-ம் தேதி திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கவும், பாஜக பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்ளவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல் வெளியானது.
கடந்த 2-ம் தேதி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் சர்வதேச விமான நிலைய புதிய கட்டிடத் திறப்பு விழா ஆகியவற்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
இந்த நிலையில் திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இஎஸ்ஐ மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க, வரும் ஜனவரி 19-ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் அன்றைய தினம் சென்னையில் கேலோ இந்தியா 2024 விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைப்பார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனையை திறந்து வைக்கும் தேதி, திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், தேதி மாற்றத்தால், பிரதமர் மோடி தமிழகம் வருவதாக இருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.