நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.ஓ.) முன்கூட்டியே மதிப்பிட்டிருக்கிறது.
இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 2030-ம் ஆண்டுக்குள் ஜப்பானையும், ஜெர்மனியையும் பின்னுக்குத் தள்ளி இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 2023 – 24-ம் நிதியாண்டுக்கான தேசிய வருமானத்தின் முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளின் அடிப்படையில் NSO அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், கட்டுமானத் துறையானது 10.7 சதவீதம் இரட்டை இலக்க வளர்ச்சியைக் கொண்டிருக்கும்.
அதேபோல, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் தவிர, அனைத்துப் பொருளாதாரத் துறைகளும் 6 சதவீதத்துக்கும் மேல் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆகவே, இவற்றின் வளர்ச்சி 1.8 சதவீதமாக இருக்கும்.
ஒட்டுமொத்தத்தில், இந்தியப் பொருளாதாரம் 2023-24 நிதியாண்டில் 7.2 சதவிகிதம் தற்காலிக வளர்ச்சி விகிதத்தை விட வலுவான 7.3 சதவிகிதம் வளர்ச்சியடையும். இது தேசிய வருவாயின் முன்கூட்டிய மதிப்பீடுகள் குறிகாட்டி அடிப்படையிலானவை.
மேலும், பெஞ்ச்மார்க் – இண்டிகேட்டர் முறையைப் பயன்படுத்தி தொகுக்கப்பட்டிருக்கின்றன. தவிர, துறைகளின் செயல்திறனை பிரதிபலிக்கும் தொடர்புடைய குறிகாட்டிகளைப் பயன்படுத்தி முந்தைய ஆண்டு (2022-23) கிடைக்கக் கூடிய மதிப்பீடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவு உள்ளீடுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது” என்று NSO தெரிவித்திருக்கிறது.