இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் இன்றைய முதல் போட்டியில் யு மும்பா – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளும், இரண்டாவது போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகளும் விளையாடவுள்ளன.
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.
பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்குபெற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி மும்பையில் இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் யு மும்பா – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. யு மும்பா அணி புள்ளி பட்டியில் ஐந்தாவது இடத்திலும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் நான்காவது இடத்திலும் உள்ளது.
இந்த இரண்டு அணிகளுமே பலம் வாய்ந்த அணி என்பதால் இந்த போட்டி பரபரப்பாக இருக்கும். இதைத் தொடர்ந்து இன்று நடைபெறும் மற்றொரு போட்டி மும்பையில் இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் விளையாடவுள்ளன. தெலுங்கு டைட்டன்ஸ் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடமான 12வது இடத்திலும், குஜராத் ஜெயன்ட்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
ஆகையால் இப்போட்டியில் வெற்றி பெற குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.