ஹைதராபாத்தில் நடைபெற இருந்த பார்முலா ஈ ரேஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்க்கு புதியதாக ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு தான் காரணம் என்று கூறப்படுகிறது.
பந்தயம் என்றாலே சவால் நிறைந்த ஒன்று. அதனாலேயே இது அனைவருக்கும் பிடிக்கும், அதிலும் பைக் பந்தயம், கார் பந்தயம் என்றால் சொல்லவா வேண்டும். அதிலும் உலக அளவில் புகழ் பெற்ற ரேஸ் பந்தயாமாக பார்மூலா ஈ உள்ளது.
இந்த ரேஸ் பந்தயத்தை தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் நடத்த ஈ-பிரிக்ஸ் ஒப்பந்தம் செய்திருந்தது. இதையடுத்து வரும் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த பந்தயத்தை ஈ-பிரிக்ஸ் ரத்து செய்துள்ளது.
இந்த பந்தயம் ரத்து செய்யப்பட்டதற்கு, புதிதாக பொறுப்பேற்று இருக்கும் காங்கிரஸ் கட்சியின் பிற்போக்கு சிந்தனை காரணமாக அமைந்திருப்பதாக முந்தைய ஆட்சியாளராக இருந்த பிஆர்எஸ் கட்சியின் அமைச்சர் கேடி ராமா ராவ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து ஈ-பிரிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அக்டோபர் 30, 2023 அன்று கையொப்பமிடப்பட்ட ஹோஸ்ட் சிட்டி ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கூடாது என்ற தெலங்கானா அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறையின் (MAUD) முடிவை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டிருப்பதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.