இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் பயிற்சி போட்டிக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது .
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.
வரும் ஜனவரி 25ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 2ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 15ஆம் தேதி 3வது டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 23ஆம் தேதி 4வது டெஸ்ட் போட்டியும், மார்ச்.7ஆம் தேதி 5வது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது.
அதற்கு முன்பாக இந்தியாவுக்கு வரும் இங்கிலாந்து இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 2 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியும், பின்னர் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியிலும் இந்திய ஏ அணி பங்கேற்கவுள்ளது.
இந்நிலையில் இந்திய ஏ அணியில் இடம்பிடித்துள்ள 12 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்த வீரர்கள் பலரும் இடம்பிடித்துள்ளனர்.
குறிப்பாகத் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய ஏ அணி :
அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிதார், சர்பராஸ் கான், பிரதோஷ் ரஞ்சன் பால், கேஎஸ் பாரத் ( விக்கெட் கீப்பர் ), மானவ் சுதர், புல்கித் நரங், நவ்தீப் சைனி, துஷார் தேஷ்பாண்டே, வித்வத் கவேரப்பா, துருவ் ஜூரல் ( விக்கெட் கீப்பர் ), ஆகாஷ் தீப்.