சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.46 ஆயிரத்து 640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து, ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 46 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ. 46 ஆயிரத்து 640-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து, ரூ. 5 ஆயிரத்து 830-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.22 குறைந்து, ரூ.6 ஆயிரத்து 360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை, 20 காசுகள் குறைந்து, ரூ.77.80-க்கும், ஒரு கிலோ 77 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.