வங்காள விரிகுடாவில் இன்று காலை 10.35 மணிக்கு, 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடா கடலில் இன்று காலை 10.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.
இதற்கிடையே, கடந்த 1-ஆம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டட இடிபாடுகளில் சிக்கி 120-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.