இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட் இரண்டாம் போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
அதில் இரண்டாவது டி20 போட்டி நேற்று மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
இப்போட்டியில் இந்திய அணி 130 ரன்களை மட்டுமே எடுத்தது. அதில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 30 ரன்களை எடுத்தார். அதேபோல் ஆஸ்திரேலியா அணி இந்த இலக்கை எளிமையாக வென்றது.
இதில் தீப்தி சர்மா 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலமாக சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற தனித்துவமான வரலாற்று சாதனை படைத்தார்.