ஜல்லிக்கட்டுக்கு என்று தனியாக எந்த நாட்டிலும் அரங்கம் கிடையாது. இப்படி இருக்கும் சூழலில் ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கதத்தின் தொடக்க விழா, வாடிவாசலுக்கு மூடுவிழா நடத்தப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தபோது, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி 2016 ஆம் ஆண்டு பெறுப்பேற்ற பின் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் 66 ஏக்கரில் ரூ.44 கோடி செலவில், 5,000 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜனவரி 23 அல்லது 24-ந்தேதி திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
`தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நமது முன்னோர்களின் வார்த்தை. நமது பண்பாடு, நாகரிகத்தின், வீரத்தின் அடையாளமாக ஜல்லிக்கட்டு திகழ்ந்து வருகிறது.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் வாடிவாசல் வழியாக மாடுகள் அனுப்பப்பட்டு சிறப்பாக நடைபெற்று வந்தது. ஆனால், தற்போது தமிழர்கள் பாரம்பர்யமாகக் கடைபிடித்து வரும் வாடிவாசலுக்கு மூடு விழா நடத்தப்படுமோ என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
பொதுவாக கிராமங்கள்தோறும் குல தெய்வங்களை வழிபட்டு, வாடிவாசல் வழியாக காளைகளை அவிழ்த்துவிடுவார்கள். இப்படி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுதான் வீரத்தின் அடையாளம், அது கண்காட்சிக் கூடம் அல்ல.
மண்வாசனை மிக்க இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு, ஜல்லிக்கட்டு வீரர்களின் கருத்தை கேட்காமல் வாடிவாசலுக்கு மூடு விழா நடத்தாதீர்கள் என மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டுக்கு மைதானம் எந்த நாட்டிலும் கிடையாது. இந்த புத்திசாலித்தனமான முடிவை யார் கூறியது என்று தெரியவில்லை, இல்லாத ஒன்றை உருவாக்கக் கூடாது.
நம் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மறைமுகமாக முயற்சி நடைபெறுகிறதோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.
தி.மு.க தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு, பராமரிப்பு செலவுக்காக மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தனர். அந்த அறிவிப்பு இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது. அதை வழங்கி காளை வளர்ப்பை ஊக்கப்படுத்தியிருக்கலாம். ஆனால், அதை விடுத்து யாருமே கேட்காத, யாருமே விரும்பாத ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்திருப்பது திணிக்கப்படுகிற திட்டமாக உள்ளது.
வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை காப்பாற்றுவதற்கும், ஒவ்வொரு கிராமத்தின் பாரம்பர்யத்தைக் காப்பாற்றுவதற்கும் அரசு முன் வருமா… மண்வாசனை கொண்ட கிராம பாரம்பரியத்தின் பண்பாட்டை குழி தோண்டி புதைத்துவிட்டு, பொம்மை விளையாட்டுபோல் ஜல்லிக்கட்டை இந்த மைதானத்தில் நடத்துவார்களா? இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்ற அச்சத்தோடு வாழ்கிற உலகத் தமிழர்களுக்கு முழு விவரத்தை வெளியிடுவீர்களா?’ என்று கேள்வி எழுகிறது.
இது குறித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை,
தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு, அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைத்து உள்ளது. அங்கு செல்ல யாரும் தயாராக இல்லை. அதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டுவதை கண்டிக்கிறோம். அம்முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்,” என, மதுரையில் பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை அண்மையில் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நடக்கும் மதுரை மாவட்டம் அலங்காநல்லுார், பாலமேடு உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளுக்குள் இடம் பெறாத, சம்பந்தமே இல்லாமல் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
அங்கு செல்ல ஜல்லிகட்டு காளைகள் வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் தயாராக இல்லை.
அம்மைதானத்தை வேறு ஏதாவது ஆக்கப்பூர்வமான பயன்பாட்டிற்கு கொண்டுவர சிந்திக்க வேண்டும். ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக இருந்தது, தி.மு.க., – காங்., கூட்டணியாக இருந்த மத்திய அரசு.
ஆனால் ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடைபெற காரணம் பிரதமர் மோடிதான் எனதிட்டவட்டமாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.