மறைந்த கேப்டன் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மலர் தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
மறைந்த கேப்டன் விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். இவரது மறைவு கலைத்துறை, அரசியல் உலகம் என்று மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் மூழ்கியது.
அரசு மரியாதையோடு கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி மாலை சுமார் 4.30 மணி அளவில் அவருடைய உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவருடைய நினைவிடத்தில் தற்பொழுது திரைத்துறையை சார்ந்தவர்களும், பல்வேறு அரசியல் தலைவர்களும் பொது மக்களும் தொடர்ச்சியாக வந்து தங்களுடைய இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேங்ற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பின்னர், சென்னை சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்த் இல்லதிற்கு சென்று, அவருடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பின்னர் அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் மகன் பிரபாகரன் உள்ளிட்டோரை சந்தித்து தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.