தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (இரவு 10 மணி வரை) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (இரவு 10 மணி வரை) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.