இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இதில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் முடிவடைந்த நிலையில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்றைய நாள் நடைபெறவுள்ள இறுதிப்போட்டி தான் கோப்பை யாருக்கு என்பதைத் தீர்மானிக்கப் போகிறது. இப்போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி அதற்கு பதிலடி கொடுப்பதுடன் உள்ளூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை முதல்முறையாகக் கைப்பற்றக் கடுமையாகப் போராடுகிறது.
அதேபோல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி தொடரை வசப்படுத்த ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டுகிறது. எனவே இந்தப் போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்காது. இந்திய நேரப்படி இன்றையப் போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
மேலும் இப்போட்டியில் இந்திய அணி 29 % வெற்றி பெறும் என்றும் ஆஸ்திரேலியா அணி 71% வெற்றி பெறும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.