இந்தோனேசியாவின் தலாட் தீவுகளில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவில், 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தலாட் தீவுகளை உலுக்கியதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.18 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ,இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தும், பொருள் சேதம் குறித்தும் தகவல் எதுவும் இல்லை.
தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் படி, நிலநடுக்கத்தின் மையம் முறையே அட்சரேகை: 4.75 மற்றும் தீர்க்கரேகை: 126.38 இல் இருப்பது கண்டறியப்பட்டது மற்றும் 80 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.