பிரான்ஸ் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதையடுத்து, 34 வயதான கேப்ரியல் அட்டல் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பிரான்ஸ் அதிபராக இம்மானுவேல் மேக்ரான் இருந்து வருகிறார். இவர் மீது, அந்நாட்டு மக்கள் சமீப காலமாக அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதை சரி செய்யவும், மக்கள் மத்தியில் நற்பெயர் எடுக்கவும் அமைச்சரவையில் மாற்றம் செய்ய மேக்ரான் ஆலோசித்து வந்தார்.
இந்த சூழலில், அந்நாட்டு பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதை ஏற்றுக் கொண்ட அதிபர் இம்மானுவேல் மேக்ரான், புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், அந்நாட்டின் கல்வி அமைச்சரான கேப்ரியல் அட்டலை பிரதமராக அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நியமித்திருக்கிறார். 34 வயதான கேப்ரியல் அட்டல் ஓரினச் சேர்க்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், பிரான்ஸின் இளம் பிரதமர் என்ற பெருமைக்குரியவராக கேப்ரியல் அட்டல் மாறி இருக்கிறார். மேலும், ஓரினச் சேர்க்கையாளர் ஒருவர் பிரான்ஸ் பிரதமராவது இதுவே முதன்முறை. அதேபோல, பிரான்சின் 2-வது பெண் பிரதமர் என்ற பெருமைக்கு எலிசபெத் போர்ன் சொந்தக்காரராவார்.