நியூஸ் கிளிக் இணைய செய்தி நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் அமித் சக்ரவர்த்தி,அப்ரூவராக மாற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சீனாவுக்கு ஆதரவான பிரச்சாரத்திற்காக பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட வழக்கில், நியூஸ் கிளிக் இணைய தள செய்தி நினவனத்தின் மனிதவளத் தலைவர் அமித் சக்ரவர்த்தியின் மனுவை டெல்லி நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஹர்தீப் கவுர், இந்த வழக்கில் மன்னிப்பு கோரிய சக்ரவர்த்தியின் விண்ணப்பத்தை அனுமதித்தார்.
இந்த வழக்கு தொடர்பான தகவல்களை டெல்லி காவல்துறையிடம் தெரிவிக்க சக்ரவர்த்தி விருப்பம் தெரிவித்து விண்ணப்பத்தை அனுப்பியுள்ளார். நடைமுறைப்படி, மாஜிஸ்திரேட் முன்பு அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.